Rock Fort Times
Online News

முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று(அக்.30) நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சென்ற முதல்வர், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் பேசியதாவது; ‘அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்த தேவர் திருமகன்,’ என்று அண்ணாதுரை பாராட்டியுள்ளார். ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வந்து பசும்பொன் திருமகனாரின் நினைவை போற்றக்கூடிய இந்த மணிமண்டபத்தை, 1974ல் கருணாநிதி கட்டிக் கொடுத்தார். பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இந்த மணிமண்டபத்தையும் கட்டினார். திமுக ஆட்சி முதல்முறையாக அமைந்தபோது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் எல்லாம், தங்களின் மக்களுக்கான கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டார்கள். அவை அனைத்திற்கும் அனுமதி வழங்கியவர் கருணாநிதி. குறிப்பாக, முக்குலத்தோர் சமூகம் தங்களின் பெரும்பான்மையான இடங்களில் கல்லூரிகளை அமைக்க திட்டமிட்டார்கள். தேவர் கல்விச் சங்கம் உருவாக்கப்பட்டது. பசும்பொன் தேவர் கல்லூரி அமைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு 44.94 ஏக்கர் நிலத்தை கருணாநிதி வழங்கினார். ரூ.3 கோடி செலவில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்