மார்ச் 1-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: சிறப்பாக கொண்டாட திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. முடிவு…!
மக்களவை தேர்தலை முன்னிட்டு ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – I பாசிசம் வீழட்டும்! ஜனநாயகம் வெல்லட்டும்’ என தொகுதி வாரியான பிரசார கூட்டங்கள் வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. கூட்டங்களை சிறப்பாக நடத்திட மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காணொளி காட்சி வாயிலாக கூட்டம் நடந்தது.

அதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன்,
சபியுல்லா, மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருச்சி மற்றும் கரூர் பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறக்கூடிய கூட்டங்களில் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு உரிமை தொகையை கிடைக்க அந்தந்த பகுதி நிர்வாகிகள் உடனடியாக முயற்சி எடுத்து பணிகளை செய்திட வேண்டும். மார்ச் 1 – ந் தேதி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.