Rock Fort Times
Online News

மனிதநேயத்தை வலியுறுத்தி திருச்சியில் மாரத்தான் ஓட்டம்..!

அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் திருச்சியில் இன்று(29-10-2023) நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போட்டியை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். நீதிமன்ற சாலையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக 5 கி.மீ தூரத்தை கடந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, திருச்சி சிஎஸ்ஐ பேராயர் சந்திரசேகரன், மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் அன்பழகன், சர்வதேச தடகள வீரர் நல். அண்ணாவி, மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொகையா ஷேக் முகமது, வாலிபர் சங்க மாநில துணை தலைவர் லெனின், மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சக்திவேல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க செயல் தலைவர் சந்தான சாமி, ஆசிய வலுத்தூக்கும் போட்டியில் ஆசியாவின் இரும்பு மனிதர் பட்டம் பெற்ற மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசாக
ரூ. 3000, ஊக்க பரிசாக 10 பேருக்கு தலா ரூ 1000 வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் , பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் ஹரி ராமச்சந்திரன், தீனா, மாவட்ட துணை செயலாளர் ஹரி பிரசாத், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி நன்றி கூறினார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்