Rock Fort Times
Online News

சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு “மணிமேகலை விருது”- * விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு…!

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவைகளுக்கு 2024-25ம் ஆண்டிற்கான “மணிமேகலை விருது” வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுஅதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு (எஸ்எச்ஜி), ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (பிஎல்எப்), வட்டார அளவிலான கூட்டமைப்பு (பிஎல்எப்), கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (விபிஆர்சி) மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு (எஸ்எச்ஜி), பகுதி அளவிலான கூட்டமைப்பு (ஏஎல்எப்) நகர அளவிலான கூட்டமைப்பு (சிஎல்எப்) போன்றவற்றிற்கான கருத்துருக்களை 14 ஊராட்சி ஒன்றியங்கள், நகா்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளிலிருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏப் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்