திருச்சி மாநகரில் உள்ள முக்கிய பகுதியான கே.கே.நகர் எல்.ஐ.சி காலனியிலிருந்து மன்னார்புரம் செல்லும் மெயின் ரோட்டில், கிருஷ்ணமூர்த்தி நகர் அருகில், சாலையின் நடுவே பாதாளச்சாக்கடையின் மேன்ஹோல் மூடி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் அரையடி உயரமுள்ள இந்த மேன்ஹோல் மூடியை சுற்றி எந்தவித தடுப்புகளோ, எச்சரிக்கை பலகையோ இல்லாததால், இதை கவனிக்காமல், இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, உயிர்சேதம் ஏற்படும்முன் உடனடியாக இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.