Rock Fort Times
Online News

லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் இறுதி ஊர்வல வாகனம், குளிர்சாதன பெட்டி: இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் யாரேனும் இயற்கை  எய்தினால் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா  அருண்காந்தி  தனது சொந்த செலவில் இறுதிஊர்வல வாகனம், குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், பந்தல் துணிகள் ஆகியவற்றை வாங்கி பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி கூறுகையில்,  மங்கம்மாள்புரம் ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச சேவையாக இறுதி ஊர்வலத்திற்கு தேவையான சொர்க்கரதம், சாமியானா பந்தல், ஃப்ரீசர் பாக்ஸ் ஆகியவற்றை சொந்த செலவில் வாங்கி அர்ப்பணித்துள்ளோம். இறப்பு என்பது திடீரென்று ஏற்படக்கூடிய ஒன்றாகும். இதனால் அந்த குடும்பத்தினர் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுவர் . அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த சேவையை தொடங்கியுள்ளோம்.  இந்த சேவை எனது பதவி காலம் இருக்கும் வரை மட்டுமல்லாமல் எனது இறுதி காலம் வரை தொடரும்.  ஒவ்வொரு துக்க வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் சூழ்நிலை பார்த்து எங்களுக்கு தோன்றியதால் இந்த சேவையை தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கும் வரை இந்த சேவையை செயல்படுத்துவேன், எனக்கு பிறகு எனது குடும்பத்தினர் அல்லது தன்னார்வலர்கள் இந்த சேவையை தொடர்ந்து நடத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்