Rock Fort Times
Online News

அடுத்தடுத்து காவு வாங்குது ஆன்லைன் ரம்மி- திருச்சி அருகே பேக்கரிமாஸ்டர் தற்கொலை. !

கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கித் தொழிற்சாலை பகுதியில் ஒருவர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது நினைவு இருக்கலாம் .இப்போது இன்று மேலும் ஒருவரை காவு வாங்கி இருக்கிறது ஆன்லைன் ரம்மி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன்.  26 வயதாகும் வில்சன் வையம்பட்டி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரியில் பலகாரம் போடும் வேலையில் இருந்து வந்துள்ளார் இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டதாகவும். அதில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சுமார் மூன்று லட்சத்திற்கு மேலாக இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாத வில்சன்,  நேற்று முன்தினம் மீண்டும் பேக்கரிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலைமையில் நேற்று தனது தாயார் வீடான அஞ்சல்காரன்பட்டிக்கு சென்ற வில்சன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்களால் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வில்சன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  .போலீசார் வில்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்