திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீற்றிருக்கும் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா 21-04-2024 ம் தேதி வேப்பிலை மாரியம்ம னுக்கு அபிஷேக ஆராதனையுடன் பூச்சொரிதல் விழா ஆரம்பித்து 15-05 -2024 புதன்கிழமை வரை நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜையும், 21ம் தேதி விநாயகர் வழிபாடு மற்றும் பூச்சொரிதல் விழா ரத பவனியும் நடைபெற்றன. வருகிற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

12-05-2024 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் புறப்படுகிறது. 13-05-2024 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வேடபரி திருவிழாவும், 15-05-2024 ம் தேதி காலை 9 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 12-05-2024 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு கொடியேற்றுதல், 7 மணிக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், காலை 8-15 மணிக்கு பால் அபிஷேகம், இரவு 10 மணிக்கு முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கின்றன. 13-05-2024ம் தேதி திங்கட்கிழமை வேடபரி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5 மணிக்கு பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு பூஜையும், காலை 7 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. 15-05-2024 திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு 22-04-2024 முதல் 15-05- 2024 வரை மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ். வீரமணி, ஆய்வாளர் எஸ்.வினோத்குமார், செயல் அலுவலர் , ந.அன்பழகன் மற்றும் எடத்தெரு, மணப்பாறைபட்டி, காரமேட்டுப்பட்டி ஊர் நாட்டாண்மைகள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மணப்பாறை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.