சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை-திருச்சி மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!
திருச்சி மாவட்டம்,
லால்குடியைச் சேர்ந்த
15 வயது
சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தாள்.
லால்குடி பகுதியை
சேர்ந்த
கார்த்திக்கும், அந்த சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டினருக்கும் தெரியும்.
இந்தநிலையில் கார்த்தி, அந்த சிறுமியை திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டார்.
ஆனால்,
சிறுமியின் தந்தை மகளின் வயதைக் காரணம் காட்டி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆயினும்
13- 06- 2021 அன்று
கார்த்திக் ஆசைவார்த்தை கூறி
சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை காணகிளியநல்லூர்
காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் கார்த்திக் மீது போக்சோ
சட்டம் உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு மீதான விசாரணை நிறைவு பெற்று இன்று(04-12-2024) நீதிபதி ஸ்ரீவத்சன்
தீர்ப்பு வழங்கினார்.
அதில், இந்திய தண்டனைச் சட்டம் 366 பிரிவின்கீழ்
குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு
5 ஆண்டு சிறை தண்டனையும்,5000 ரூபாய் அபராதமும்,
போக்சோ வழக்குக்கு
20 ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும்,
கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத கால சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சுமதி வாதாடினார்.
***
Comments are closed.