குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருச்சி பாய்லர் ஆலை ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்தவர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலையில் ஃபிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவருக்கும், அதே ஆலையில் வேலை பார்க்கும் முத்துக்குமாருக்கும் (38) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரது குடும்பத்தினரும் ஒன்றாக பழகி வந்தனர். இப்படி நட்பாக பழகி வந்த நிலையில் பிட்டரின் மனைவி, சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து முத்துக்குமார் கொடுத்துள்ளார். இதனை அறியாத அந்தப் பெண் அந்த குளிர்பானத்தை குடித்ததும் சிறிது நேரத்தில் மயங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட முத்துக்குமார், அந்த பெண்ணை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை வைத்து அந்த இளம்பெண்ணை முத்துக்குமார் மிரட்டி வந்துள்ளார். இதனால், அவரது தொல்லை தாங்க முடியாத அந்தப் பெண், திருச்சி எஸ்.பி.செல்வ நாகரத்தினத்திடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு எஸ்.பி.உத்தரவிட்டார். அதன்பேரில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பாய்லர் ஆலை பிட்டரின் மனைவி உட்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Comments are closed.