திருச்சி உறையூர் நவாத் தோட்டம் எம் ஆர் ஜி பில்டிங் அருகே ரசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் சாந்தகுமார் (வயது 38).இவர் வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் தகராறில் ஈடுபட்டதுடன், சாந்தகுமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சாந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் வழக்கு பதிந்து நாராயணசாமியை கைது செய்தனர்.