திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நம்பியார். இவரது மகன் அர்ஜுன் நம்பியார் (35).இவர் அரசு அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அர்ஜுன் நம்பியாரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். வேட்டையாடுவது எங்களது குல தொழில் என்றும் அதற்காக செல்போனில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறினார். லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக நவல்பட்டு போலீசார் அர்ஜுன் நம்பியாரை கைது செய்தனர்.
Comments are closed.