Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் 1400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது…!

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.வின்சென்ட் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் ரேஷன் அரிசி மற்றும் உணவு பொருட்கள் பதுக்கல், கடத்தல் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி அரியமங்கலம், திடீர்நகர், அம்மாக்குளம், காமராஜ் நகர், அம்பிகாபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது, ஜோதிநகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அங்கு 28 சாக்கு பைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அ. அக்பர்பாஷா (45) என்பவர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கால்நடைகள் மற்றும் கோழித்தீவனம் தயாரிக்க கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அக்பர் பாஷாவை கைது செய்த போலீசார் 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்