மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில், மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில துணைத்தலைவர் ஈரோடு கோவிந்தராஜ், சென்னை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் திருச்சி கே.சி. நீலமேகம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு உடனே மக்களை பாதிக்கும் மது விற்பனை நேரத்தை மாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைந்து விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்விற்கு திருச்சி விருந்தோம்பல், சுற்றுலா அமைப்பு, நிர்வாகத் தலைவர் மு.பொன்னிளங்கோ, ஈரோடு சிவக்குமார், அத்தானி சீனிவாசன், மதுரை சந்திரசேகரன், தல்லாகுளம் முருகன், கோவை எஸ்.கே.பாபு, ஞானவேல், தஞ்சாவூர் முருகானந்தம், கரூர் சுகுமார், சதானந்தம், பாண்டிச்சேரி சுதாகர், சென்னை ஜெகதீசன், லட்சுமி நாராயணன், திருச்சி சண்முகசுந்தரம், விஜயகுமார், ஆர்.கே.ராஜா, விஜயகுமார், முருகதாஸ், இளங்கோ, குமரன், பெரம்பலூர் சிவக்குமார், தூத்துக்குடி கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
