ஈரோடு மாவட்டம், பாசூர் ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக 31-03-2025 (திங்கட்கிழமை) திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூருடன் நிறுத்தப்படும். ஈரோட்டுக்கு இயக்கப்படாது. இதுபோல் அன்று ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதில், கரூரில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும். ஈரோட்டில் இருந்து இயங்காது. மேலும் மறு மார்க்கத்தில் செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) செங்கோட்டையில் அன்று அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ஈரோட்டுக்கு வராது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.