கார்த்திகை தீபத் திருநாளை ஓட்டி நாடு முழுவதும் இன்று ( 26.11.2023 ) மாலை கோவில்களிலும், இல்லங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதே போல பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கார்த்திகை தீபத் திருவிழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 3.45 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவில் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை அடுத்து இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு தீபம் ஏற்றப்படும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.