Rock Fort Times
Online News

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000: தொட்டியத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!

தமிழகம் முழுவதும் 1 கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் இன்று( பிப்.13) காலை மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள மகளிர்களுக்கு உரிமைத் தொகை 5000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதை அடுத்து, திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில், திமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்