மதுரை மாநாடு : திருச்சியில் அதிமுகவினா் வாகன அணிவகுப்பு…
திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்பு...
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 20-ந்தேதி மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரசார வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன அணிவகுப்பு ஊர்வலம் சிந்தாமணி அண்ணா சிலையில் தொடங்கி சத்திரம் பேருந்து நிலையம், மரக்கடை, மார்க்கெட் வழியாக சென்று பால்பண்ணை ரவுண்டானாவில் முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், மாவட்ட ஆவின் சேர்மனும், மாவட்ட மாணவரணி செயலாளருமான சி.கார்த்திகேயன், அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் வனிதா, பத்மநாதன், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், நிர்வாகிகள் என்ஜினீயர் ஜெ.இப்ராம்ஷா, பொன்.அகிலாண்டம், வசந்தம் செல்வமணி, கிருஷ்ணன், குமார், தில்லை விஸ்வா, ராமச்சந்திரன் ஷாஜகான், வண்ணாரபேட்டை ராஜன் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.