Rock Fort Times
Online News

மார்ச் 9ம் தேதி பிரம்மாண்ட மாநாடு: திருச்சி குலுங்கட்டும்… தி.மு.க.வெல்லட்டும்!* தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் களம் தீவிரம் அடைந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு, பாக முகவர்கள் பயிற்சி மாநாடு, பொதுக்கூட்டம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. அந்தவகையில் திருச்சி, சிறுகனூரில் மார்ச் 9ம் தேதி திமுக மாநில மாநாடு நடக்கிறது. சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் இந்த மாநாடு பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு முன்னின்று செய்து வருகிறார். மாநாடு குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், திருச்சி குலுங்கட்டும், திமுக வெல்லட்டும். சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும். ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கும் உறுதியோடு தேர்தல் களத்தில் பணியாற்றும் பாசறையாக மாநாடு விளங்கும். இந்தி திணிப்புக்கு இன்று மட்டுமல்ல என்றுமே எதிர்ப்புணர்வை கொடுத்து உயிரைத் தியாகம் செய்து வெளிப்படுத்தியது திருச்சி. அதிமுக ஆட்சிக்கால சீரழிவிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்து வருகிறோம். தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடைய திமுக அரசு தொடர் வேண்டும். உங்களைக் காணும் போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். உங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’ எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்