தமிழகத்தில் இன்று(15-10-2024) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. அது, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த 2 தினங்களுக்கு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
Comments are closed.