Rock Fort Times
Online News

காதல் திருமணம் செய்த வாலிபர் திருச்சியில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை…!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (வயது 30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். காதல் மனைவி பிரிந்த சோகத்தில் முத்தமிழ்மாறன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த முத்தமிழ்மாறன் திருச்சிக்கு வந்தார். பின்னர், விமான நிலையம் வயர்லெஸ் ரோட்டில் ஒரு பிரபலமான ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு அவர் மன வேதனையில் ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ் மாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோட்டுக்கடையில் நயன்தாராவுக்கு BIRTHDAY TREAT வைத்த விக்னேஷ் சிவன்

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்