திருச்சி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 7 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் ! த.வெ.க வெளியீடு!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக ஒருபுறம் கரூரில் முப்பெரும் விழா நடத்தி ஆர்ப்பரிக்க, மறுபுறமோ நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சத்தமே இல்லாமல் தொகுதிவாரியாக தலா ஒரு ஒருங்கிணைப்பாளர், 6 இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளும் இதில் அடங்கும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக கே.சுரேந்திரனும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக பி.பழனிவேல், ஏ.ஜீவானந்தம், எல்.மருதமுத்து, கே.மேனகா, எஸ்.ஹரிஹரன், எஸ்.புவனேஸ்வரி ஆகியோரும், திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளராக இ.முகுந்தனும், இணை ஒருங்கிணைப்பார்ளராக வி.யோகேஸ்வரன், கே.கவிதா, பி.அரவிந்த், எஸ்.ராகுல், வி.பிரசாந்த், எம்.விஜயசாந்தி ஆகியோரும் திருச்சி மேற்கு தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக ஆர்.மணிகண்டனும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.மணிகண்டன். ஆர்.எஸ்.செங்குளத்தான், ஆர்.ஐஸ்வர்யா, ஹெச்.பைரோஸ், ஐ.ஜான் ஜீவானந்தம், சி.கருப்பையா ஆகியோரும், முசிறி தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளராக ஏ.காயத்ரியும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஆர்.குணால், எம்.சௌந்தர்யா, ஆர்.சித்தார்த்தன், எஸ்.ஆஜய், டி.அழகுசுந்தரம், எஸ்.சங்கர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் துறையூர் தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளராக இலட்சுமிபாய் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக டி.நாகஜோதி, எஸ்.ஜீவா, ஜி.சிவப்பிரகாஷ், டி.சந்தோஷ், என்.வெண்ணிலா, ஜி.வினோத் ஆகியோரும், மண்ணச்சநல்லூர் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக ஜி.நவீன், இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஜி.சின்னதவேஸ், எஸ்.நந்தகுமார், ஆர்.பிரவீன், எம்.கவிதா, ஜி.கீர்த்திகா, வி.சிவராமகிருஷ்ணன் ஆகியோரும், லால்குடி தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக பி.அன்பழகனும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக இ.செல்வக்குமார், ஜி.சௌமியா, டி.கவியரசி, யு.ராஜ்குமார், ஜெ.போர்முரசு, கே.பிரசாந்த் ஆகியோரும், திருவெறும்பூர் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக என்.பாரதிராஜா, இணை ஒருங்கிணைப்பாளர்களாக எம்.வி.கோகுல்நாத், எம்.சக்திவேல், எஸ்.மகேஷ்குமார், எம்.சாந்தி, வி.அனிதா பெனி, ஆர்.வெங்கடேசன் ஆகியோரும், மணப்பாறைக்கு ஒருங்கிணைப்பாளராக ஜி.ராஜா, இணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.சண்முகசுந்தரம், கே.ஸ்வாதி, ஆர்.ஆனந்த், எம்.மணிகண்டன், ஜி.சித்திரைசெல்வம், கே.நந்தினி கரிகாலன், நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானோர் படித்த பட்டதாரி இளைஞர்களாக உள்ளனர். இப்பெயர் பட்டியலில் பெண்களுக்கும் குறிப்பிட்ட அளவிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
Comments are closed.