தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). விவசாயியான இவர் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை பணிக்காக தினமும் காலை 5-30 மணி அளவில் கைதிகள் அழைத்துச் செல்லப்படுவர். அதன்பிறகு காலை 8-30 மணி அளவில் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவர். அந்தவகையில் இன்று (ஜூலை 11) சிறை பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேந்திரன் திடீரென மாயமானார். அவரை சிறை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து சிறையில் இருந்து தப்பி ஓடிய ராஜேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.