கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் “ஹாயாக” புகுந்த சிறுத்தை- அச்சத்தில் உறைந்த காவலர்கள்…! ( வீடியோ இணைப்பு)
கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்திற்குள் இரவு சிறுத்தை ஒன்று “ஹாயாக” புகுந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்த காவலர்கள் அச்சத்தில் உறைந்ததோடு காவல் நிலையத்திலிருந்து அவசரம், அவசரமாக வெளியேறினர். ஒருவர் மட்டும் உள்ளே இருந்துள்ளார். அவர் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் அப்படியே ஒதுங்கி நின்று விட்டார். பின்னர் சிறுத்தை வெளியே சென்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அவர், காவல் நிலைய உள்அறை கதவை சாத்திக்கொண்டார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. காவல் நிலையத்தில் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்பதே காவலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காவல் நிலையத்திற்குள் சிறுத்தை புகுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.