Rock Fort Times
Online News

திருச்சியில்  நடக்கும் யாதவர்கள் மாநாட்டில் தலைவர்கள் பங்கேற்பு….

தமிழ்நாடு யாதவர் பேரவை தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி

திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் செப்டம்பர் மாதம் 2ம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு யாதவர் பேரவை தலைவர் நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் வருகிற செப்டம்பர் 2ம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ளது. அங்கு, முன்னாள் மத்திய மந்திரி முலாயம்சிங் யாதவ் முழு உருவ சிலை திறக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் யாதவ சமுதாய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். முலாயம்சிங் யாதவ் மகனும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், லல்லுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வியாதவ் உள்பட பலர் பங்கேற்க இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்