நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் துணை ஜனாதிபதி மற்றும் பாஜக எம்.பிக்கள் ஆகியோரை கண்டித்தும், ஜனநாயகமான நீதித்துறையை பாதுகாக்க கோரியும் திருச்சி நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று(24-04-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்ட பொருளாளர் கெவின், வழக்கறிஞர்கள் சம்பத், அருணன், பழனிவேல், மோகன், கென்னடி, அலெக்ஸ், முருகானந்தம் ஆகியோர் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் வைத்தீஸ்வரி, திவ்யா, ஜெனிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.