Rock Fort Times
Online News

திருவெறும்பூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி…

திருச்சி திருவெறும்பூர்  பகுதி காட்டூர் பாரதிதாசன் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது 45). இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பாப்பாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் இரும்பு தடுப்பை (பேரிகார்டு) கடந்து செல்ல முயன்றபோது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நிலம் கையகப்படுத்தி அணுகு சாலையை அமைக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகளை கடந்த நிலையிலும் பணிகள் தொடங்கப்படவில்லை. இனியாவது விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் அணுகு சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்