திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீதேவி மங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 38). தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கனகா என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து கனகா 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பழனிச்சாமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கடுமையான வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பாடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பழனிச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.