Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி மகா மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புன்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், காவிரியில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வருதல், யாக பூஜைகள், நவ கன்னிகா பூஜை, சுமங்கலி,
சுவாசினி பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. ஜூலை இரண்டாம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நவசக்தி மகா விநாயகர், நவசக்தி மகா மாரியம்மன், நவசக்தி மகா முருகன், பனையடி கருப்பு, காத்தவராயன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, பிராம்னி, நாகர், நவக்கிரகம், உற்சவர் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,
பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நேதாஜி நகர் மகளிர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்