கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 2050 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்நிலையில் தமிழக பா.ஜ.கவினர் மற்றும் இந்து முன்னனியினர் இத்தினத்தை புஷ்பாஞ்சலி தினமாக அனுசரித்து வருகின்றனர்.
அதனையொட்டி கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளும் ஸ்கேன் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலமாக பரிசோதனை செய்து வருகின்றனர். வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து கோவை மாநகருக்குள் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னா் அனுமதிக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு பணியில் இரண்டு டிஐஜிக்கள், நான்கு டிஎஸ்பிக்கள், 18 உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 3000 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.