திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள இருங்களூரை சேர்ந்தவர் ஜெகன். பி.காம் பட்டதாரியான இவர்,அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ஜெகன் இவரது காதலை அப்பெண்ணிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்த பெண் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து காதலை கைவிட்டு விடுமாறு பெண்ணின் பெற்றோர் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், அப்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, இவரது நண்பர்களான ரீகன் ராஜ், சிவகுமார், ரெஸ்லின் ஆகியோருடன் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை குண்டுகட்டாக காரில் கடத்தி சென்று விட்டனர். இதையடுத்து மாவட்ட காவல் உதவி எண்ணிற்கு கால் செய்த பெண்ணின் பெற்றோர், இது குறித்து புகார் அளித்தனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் திருச்சி மட்டுமில்லாமல் அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே இளம்பெண் கடத்தி வந்த காரை மடக்கி பிடித்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட ஜெகன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.