ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த கேரளா பெண்ணிடம் பணம் திருட்டு… * சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபரை மடக்கிய கோவில் ஊழியர்கள்
கேரளாவை சேர்ந்த விஷ்ணுதாஸ் மற்றும் அவருடைய மனைவி காயத்ரி இருவரும் இன்று( ஏப்ரல் 6) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், காயத்ரி ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ரூ.4000 பணத்தை நைசாக திருடி சென்று விட்டார். சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த காயத்ரி, பையில் வைத்திருந்த பணத்தை காணாமல் திடுக்கிட்டார். இதுகுறித்து அவர்கள் கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்தான் பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை ஸ்ரீரங்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர், உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்த ஆனந்தன்(40) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்டு தம்பதியிடம் ஒப்படைத்தனர்.
Comments are closed.