Rock Fort Times
Online News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம்பெற்ற 2 பெண் எஸ்.பி.க்கள்…!

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அவர் சம்பவ இடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், அங்கு வசிக்கும் பொது மக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதி நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் உடனே ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூர் சம்பவம் தொடர்பாக இன்று(அக் 4) விசாரணையை தொடங்க உள்ளனர். இதன்படி, கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் போலீசாரிடம் உள்ள கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்