தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக, அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள், ஊர்க்காவல் படை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் பயிற்சி கல்லூரி ஐஜி ஆர்.தமிழ்ச்சந்திரன், தமிழ்நாடு சீருடை பணியார் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பி.கே.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக சி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜியாக கே.ஜோஷி நிர்மல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு மண்டல சட்டம் – ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜியாக திஷா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக டிஜஜியாக ஐபிஎஸ் அதிகாரி பி.சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பியாக இ.டி.சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக டி.என்.ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.பி.சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சுந்தரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி ஆட்சியர் கே.செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
கரூர் ஆட்சியர் டி.பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
செங்கல்பட்டு துணை ஆட்சியர் ஜி.லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் எம்.தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இ.சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.