திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாளை கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் கருத்துரை கூட்டம் நாளை ( சனிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு குடமுருட்டி பாலம் அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே. என். நேரு ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறி சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர்,வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.