திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்திபெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள செப்புக்கொப்பரையில் 300 மீ்ட்டர் அளவு உள்ள மெகா திரி வைக்கப்பட்டு 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நாளை 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜை நடைபெற்றது. கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மெகா திரி தயாரிக்கும் பணி தாயுமான சுவாமி கோவில் அருகே தொடங்கியது. இந்த பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணி முடிந்ததும் மெகா திரியை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைத்து நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்பட 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நாளை மாலை 6 மணிக்கு காா்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.