Rock Fort Times
Online News

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கங்காரு முறையில் தீவிர சிகிச்சை …

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி ரிஷா ( வயது 23). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான ரிஷா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அடுத்தடுத்து ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் என மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து செயற்கை சுவாசம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி ஆகிய சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைகளின் எடை அதிகரிக்கவும், வெப்பநிலை சீராக கிடைக்கவும், கங்காரு சிகிச்சை முறை மூலம் குழந்தைகளை தாயின் நெஞ்சுப் பகுதியோடு அணைத்து பராமரித்தனர். இதன் மூலம், தாயின் வெப்பநிலை குழந்தைகளுக்கு சீராக கிடைத்தது. தற்போது 3 குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாக உள்ளனர். குழந்தைகளின் எடையை அதிகரிக்க மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று குழந்தைகளையும் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்