Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – குற்றப்பத்திாிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மாணவி கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் இல்லை, தற்கொலைக்கான முகாந்திரம் உள்ளது என குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததை அடுத்து கலவரம் ஏற்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடைபெற்றபோது, கலவரமாக வெடித்தது. இதில், பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதன்பின் பள்ளி மூடப்பட்டு, சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்