திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பொங்கல் விழா இன்று (12-01-2024) கொண்டாடப்பட்டது. பெரியார் மருந்தியல் கல்லூரி, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியார் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியார் தொடக்கப்பள்ளி, பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் இவ்விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி, மோகனா அம்மையார் ஆகியோருக்கு மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர், பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு கி.வீரமணி புத்தாடைகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு கி.வீரமணி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,ராமர் கோயிலை முழுமையாக கட்டவில்லை.இதை திறக்க மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நான்கு சங்கராச்சியார்கள் கேட்கிறார்கள். இதைக் கேட்ட நான்கு சங்கராச்சாரியார்களையும் இந்துமத விரோதிகள் என சொல்வீர்களா?. நாடாளுமன்ற தேர்தலில் ராமரையே வேட்பாளராக நிறுத்தினாலும் நிறுத்துவார்கள் என்றார்.இந்தியா கூட்டணி என்பது ஆண்டிகள் கட்டிய மடம் என ஓபிஎஸ் விமர்சித்து உள்ளாரே என்ற கேள்விக்கு..ஆண்டிகளுக்காவது மடம் இருக்கிறது. இவர் எங்கே போவது என்று இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்.
அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.