திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் வருகிற ஆனி மாதம் 24-ம் தேதி (08.07.2025) செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் 9-ம் தேதி புதன்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும், மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.