முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோமரசம்பேட்டையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, தொழிற்சங்க மாநில தலைவர் தாடி மா.ராசு, மணிகண்டம் வடக்கு ஒன்றிய மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, சார்பு அணி செயலாளர் கண்ணதாசன், புல்லட் ஜான், சோனா விவேக், மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கோப்பு நடராஜ், கோபால், செயலாளர் செந்தில், எம்.ஜி.ஓ பழனிச்சாமி, புங்கனூர் கார்த்தி நவனி, பொன் முருகன், தர்மா தேவா, மகாமுனி, வைரவேல், சமயபுரம் ராமு, ஸ்ரீரங்கம் நடேசன், ஜெயம் ஸ்ரீதர், சுந்தரமூர்த்தி, முசிறி மைக்கேல் ராஜ், சமயபுரம் தினேஷ், எட்டரை அன்பரசு, ஆமூர் சுரேஷ் ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.