திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்பி
யுமான ப.குமார், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு
அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு கழகத்தின் சார்பில் 25.1.2025 (சனிக்கிழமை)
வீர வணக்கம் செலுத்தப்பட இருக்கிறது. ஆகவே, அன்றைய தினம் காலை 10.35 மணி அளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து அமைதி ஊர்வலமாக சென்று மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.