மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் உட்பட சமண மதத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இன்று(10-04-2025) பேரணியாக சென்றனர். மகாவீர் சிலையை சுமந்துக்கொண்டு சென்ற அவர்கள் அச்சிலைக்கு மலர்தூவி வழிபாடும் செய்தனர். திருச்சி குஜிலித்தெருவில் தொடங்கிய பேரணி, பெரிய கடைவீதி வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்தை வந்தடைந்தது. உயிர்களை பலியிடும் சடங்குகளை முன்னிறுத்தி வேத மதங்கள் இயங்கிய காலத்தில், அதற்கு மாற்றாக, ‘வாழ், வாழ விடு’ என்கிற அடிப்படை கோட்பாட்டை முன்னிறுத்தி மக்களிடம் சம மன நிலையை கொண்டு வாழும் கலையை போதித்தவர் மகாவீர். அதனை நினைவுபடுத்தி போற்றும் விதமாக அனைவருக்கும் இன்று திருச்சி பெரியக்கடைத்தெருவில் உணவு தானம் வழங்கப்பட்டது.

Comments are closed.