திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆரம்பத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் மாணவரணி செயலாளராக செயல்பட்டு வந்த இவர், பிறகு மாவட்ட செயலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கட்சியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு திமுகவில் மாநகர் மாவட்ட அயலக அணியில் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் மாநில இணைச் செயலாளராக இப்ராம்ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நண்பர்களும், இவரது ஆதரவாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.