இதுதான் நீங்க வேலை பார்க்கும் லட்சணமா… உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்ல…- அரியலூர் மகளிர் காவல் நிலைய போலீசாரை மைக்கில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய டிஐஜி வருண்குமார்! (ஆடியோ இணைப்பு)
அரியலூர் மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையம் ஒன்றில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் விசாரணைக்கு வந்ததாகவும், அவரை அலை கழித்ததால் அந்தப் பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எப்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு அரியலூர் மகளிர் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சுமதி, புகார்தாரரை தரக்குறைவாக பேசி அவமதித்துள்ளார். இந்த ஆடியோவுடன் திருச்சி டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தையும், சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளரையும் மைக்கில் தொடர்பு கொண்ட திருச்சி சரக டிஐஜி வருண்குமார், மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?, என்ன ஆய்வாளர் நீங்க…தெரியாம பேசிட்டாங்கன்னு சொல்றீங்க.. வெட்கமா இல்ல உங்களுக்கு… இதான் உங்க போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா… எஸ்.ஐ பேசுவதை மைக்கில் போடுகிறேன் பாருங்க…அவரை சஸ்பெண்ட் பண்ணுங்க… அவர வந்து என்ன பார்க்க சொல்லுங்க… என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இதனால், அரியலூர் மகளிர் நிலைய பெண் போலீசார் ஆடி போயினர். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.