Rock Fort Times
Online News

டெல்லியில் விஜயை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைக்க முயற்சியா?* நயினார் நாகேந்திரன் பதில்…!

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, சிபிஐ முன்பு ஆஜராக விஜய் இன்று (மார்ச் 14) டெல்லி செல்கிறார். நாளை( ஞாயிற்றுக்கிழமை) சிபிஐ முன்பு ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். முன்னதாக விஜய்யிடம், என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து செயல்படுமாறு பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காகவே விஜய் டெல்லி செல்கிறார். அவர் டெல்லி செல்வதற்கும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்ற கேள்விக்கு இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைக்க உள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்