தமிழகத்தில் வீடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு மற்றும் டூ பேஸ், த்ரீ பேஸ் கரண்ட் உள்ளிட்டவற்றில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளதாக மின்னகத்திற்கு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில் மண்டல வாரியாக மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மின்சாரத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை கோட்ட வாரியாக பல்வேறு நாட்களில் நடைபெறுகிறது. இது குறித்த அறிவிப்பை திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது., திருச்சி மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் மே மாதம் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 6ம் தேதி துறையூர் கோட்டத்திலும், 9ம் தேதி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கும், மே 13ம் தேதி லால்குடி கோட்டத்திற்கும், 16ம் தேதி திருச்சி கிழக்கு கோட்டத்திற்கும், 20ம் தேதி திருச்சி நகர கோட்டத்திற்கும், 27ம் தேதி மணப்பாறை கோட்டத்திலும் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. இந்த சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.