வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வருவதில் கால தாமதமா?- 20- ம் தேதி நடக்கும் குறைதீர் கூட்டத்தில் முறையிட அழைப்பு…!
வீட்டில் கேஸ் சிலிண்டர் தீர்ந்ததும் அடுத்த சிலிண்டருக்கு புக்கிங் செய்ததும் அதிக கால தாமதமாக விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை களையும் பொருட்டு திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது, முசிறி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.09.2025 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முசிறி வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.