தமிழகத்தில் அடுத்த ஆண்டு(2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதத்திற்கு மேலாக மௌனம் காத்தார். பின்னர், மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வந்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். அதன் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை உள் அரங்கில் மட்டும் நடத்தினார். இது ஒருபுறம் இருக்க கூட்டணி பேச்சு வார்த்தையும் மறுபுறம் நடந்து வருகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.