Rock Fort Times
Online News

ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான சேவை கட்டணம் உயர்கிறதா?- வெளியான தகவல்…!

ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயருகிறது. அதேபோல் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் ரூ100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், கட்டண உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்